தமிழ்நாட்டில் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நேற்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடத்தியது. சுமார் 18 மணி நேரம் இந்த சோதனை நீடித்ததாகத் தெரிகிறது.
மேலும், அவரை சந்திக்க அவரது கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை வைத்த போதும், நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில் பாலாஜியை தி.மு.க-வைச் சேர்ந்த யாரையும் சந்திக்க அமலாக்கத்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர் என்ற தகவல் வெளியானது. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்ட நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

