விருப்ப வாக்கு எண்ணிக்கை
எந்த வேட்பாளரும் 50% வாக்குகளைப் பெறாததால் ‘விருப்ப வாக்கு” எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் முதல் விருப்பம், இரண்டாம் விருப்பம், 3ஆம் விருப்பம் என்ற அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். 50% க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார்.
இலங்கை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக இந்த ஜனாதிபதி தேர்தலில் யாருக்கும் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் கிடைக்கவில்லை. அநுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் அதிக வாக்குகளைப் பெற்று, முதலிரு இடங்களில் பிடித்துள்ளனர்.
இனி, அனுர குமார திஸநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் பெற்ற விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.
