பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், போகி பண்டிகையை முன்னிட்டு, தியாகராய நகர், பர்கிட் சாலையில் உள்ள சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் பங்கேற்ற புகையில்லா போகி விழிப்புணர்வுப் பேரணியினை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் மேயர் பிரியா.
இந்நிகழ்வின் போது தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர், கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர், கூடுதல் ஆணையாளர், நிலைக்குழுத் தலைவர், மத்திய வட்டார துணை ஆணையர்,மாமன்ற உறுப்பினர்கள், சுகாதார கல்வி அலுவலர் முனைவர், மற்றும் எக்ஸ்நோரா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புகையில்லா போகியில்! மாசு இல்லாத சமுதாயம் படைப்போம்!!! என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.




