Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது" – சினேகன் கூறுவதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 24, 2024
in அரசியல் செய்திகள்
0
“மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது" – சினேகன் கூறுவதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


‘மய்யம் என்பது அசையாமல் இருப்பதல்ல சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது’ என்று மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

சதீஷ் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் ‘சட்டம் என் கையில்’. இந்த படத்தில் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘சிக்ஸர்’ திரைப்படத்தை இயக்கிய சாச்சி இந்த படத்தை இயக்கி இப்படம் வரும் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் சிறப்பு காட்சி பிரபலங்களுக்கு திரையிடப்பட்டிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்
Kamal Haasan: “நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி…” – கலங்கிய கமல் ஹாசன்; பின்னணி என்ன?

அதில் கலந்துகொண்ட கவிஞரும், மக்கள் நீதி மய்யத்தின் மாநில தலைவரான சினேகனிடம், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல் ஹாசன் அவராகவே தன்னிசையாகச் செயல்படுகிறார் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகிறது. இதற்கு உங்களின் கருத்து என்ன? என்று கேட்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலளித்த சினேகன், ” சமூக வலைதளங்களில் பரவும் கருத்துகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. கட்சிக்குள் என்ன நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் சரி எப்போதும் பொதுக்குழு, நிர்வாகக்குழுவை கூட்டிதான் எங்கள் தலைவர் முடிவெடுப்பார்.

எங்கள் அனைவரையும் கைக்கோர்த்து கொண்டுதான் அவர் அனைத்து பணிகளையும் செய்கிறார். அவர் தன்னிசையாக இயங்குகிற ஆள் கிடையாது என்பது உங்களுக்கே தெரியும். திரையாக இருந்தாலும் சரி தரையாக இருந்தாலும் சரி அவர் அனைவருடனும் இணைந்துதான் பணியாற்றுவார். தன்னிசையாகத்தான் அவர் செயல்படுகிறார் என்று தகவல் பரவினால் அது தவறான கருத்து.

சினேகன்

மய்யம் என்பது அசையாமல் இருப்பது அல்ல. சூழலுக்கு ஏற்றவாறு, பிரச்னைக்கு தகுந்தவாறு மக்கள் நலன் கருதி முடிவெடுப்பதுதான் மய்யம். மக்கள் நலன் கருதி யாரு நடுநிலைமையாக முடிவெடுக்கிறார்களோ அதுதான் மய்யம். அதைதான் நாங்கள் செய்துவருகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

பாலஸ்தீன அதிபரைச் சந்தித்த பிரதமர் மோடி… காசா குறித்துப் பேசியது என்ன?



.

Previous Post

“பரதன் ஜி ராமரின் காலணியை வைத்திருந்தது போல…” – டெல்லி முதல்வரின் அடடே ஐடியா! | Delhi CM Atishi Sits Next To Kejriwal’s Empty Chair

Next Post

பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை காரணமின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநர்: தில்லி கூட்டத்தில் அப்பாவு குற்றச்சாட்டு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை காரணமின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநர்: தில்லி கூட்டத்தில் அப்பாவு குற்றச்சாட்டு

பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை காரணமின்றி நிறுத்தி வைக்கும் ஆளுநர்: தில்லி கூட்டத்தில் அப்பாவு குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In