Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மத்திய இணை அமைச்சரின் மருமகன் சுட்டுக்கொலை.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 25, 2025
in அரசியல் செய்திகள்
0
மத்திய இணை அமைச்சரின் மருமகன் சுட்டுக்கொலை.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த அதிர்ச்சி தகவல்
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 9:14 PM IST

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன் விஸ்வஜித், தண்ணீர் தகராறு காரணமாக சகோதரர் ஜெயஜித்தால் சுட்டுக்கொல்லப்பட்டார். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

News18News18
News18

மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராயின் மருமகன்கள் விஸ்வஜித் மற்றும் ஜெயஜித். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் கிராமத்தில் ஒரே வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் வீட்டில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அதிகாலையில் இருவரின் மனைவிகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தத்தமது மனைவிக்கு ஆதரவாக பேசிய அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் கைகலப்பில் ஈடுபட்டு மல்லுக்கட்டியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த விஸ்வஜித், வீட்டில் வைத்திருந்த தனது துப்பாக்கியை எடுத்து ஜெயஜித்தை சுட்டதாக கூறப்படுகிறது. அதில், காயமடைந்த ஜெயஜித், விஸ்வஜித் கையில் இருந்து துப்பாக்கியை பறித்து அவரை சுட்டுள்ளார்.

இதையும் படியுங்கள் : “அப்பா டிரம்மில் இருக்கிறார்..” – மீரட் சம்பவத்தில் 6 வயது மகள் சொன்னது என்ன? – திடுக் தகவல்கள்!

மகன்களை சமாதானம் செய்ய முயற்சித்த அவரின் தாயார் ஹினா தேவியின் கையிலும் குண்டு பட்டுள்ளது. கணப்பொழுதில் நடந்த அசம்பாவிதத்தை கண்டு அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால், மருத்துவமனை வரும் வழியிலேயே விஸ்வஜித் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள ஜெயஜித்தை, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் தாயாருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்து துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் ஜெயஜித்தின் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது. மேலும், சகோதரர்கள் ஒரே வீட்டில் வசிந்து வந்த போதும், அடிக்கடி அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மத்திய இணையமைச்சரின் உறவுக்காரர் வீட்டில், குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

First Published :

March 20, 2025 9:14 PM IST



.

Previous Post

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

Next Post

குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In