பஞ்சாப் லூதியானாவில் கன்னா பகுதிக்கு அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆயில் டேங்கர் மேம்பாலத்தில் கவிழ்ந்ததால் எரிபொருள் டேன்க் தீப்பிடித்து எரிந்து வருகிறது.
ஜனவரி 3 புதன்கிழமை எண்ணெய் டேங்கர் தீப்பிடித்த சரியான தருணத்தை படம்பிடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எண்ணெய் டேங்கர் தீப்பிடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, சிலர் தூரத்தில் இருந்து அதை படம் பிடித்துள்ளனர்..
சில நிமிடங்களில் எண்ணெய் டேங்கர் திடீரென பரவிய தீயில் எரிந்ததைக் காணமுடிகிறது , அந்த இடத்தில் இருந்தவர்கள் அனைவரும் பீதியில் ஓடுவதைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை.

