தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் டாஸ்மாக் கடை அருகே நடந்த மோதல் சம்பவத்தில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர் கிருபானந்தம். இவர் திமுக கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இவரும், அப்பு என்பவரும் சென்ற போது அங்கிருந்த சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் காயம் அடைந்த அவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறை சேர்ந்த துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் ஆகிய நால்வரை கைது செய்தனர். மேலும் மோதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

