குழப்பம் இல்லாத கதைகளைக் கேட்கும் போதே அதில் வர்ற கதாபாத்திரங்களைப் புரிஞ்சுகிட்டு நடிகிறது பெரிய ‘டாஸ்க்!’ இதுல ஆல்டர்நேட் ரியாலிட்டின்னு சொல்றீங்க. இந்த உலகத்தில் இல்லாத விஷயங்கள் நிறைய இந்தக் கதையில் இருக்கே.. இது சரிபட்டு வருமா என்று இயக்குநரிடம் கேட்டேன். அவரோ.. ‘அடியே!ங்கிற இந்தத் தலைப்புலேர்ந்து தெரியலையா இதுல ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்குன்னு. ஆனால், இது ஒரு சிம்பிளான காதல் கதைங்க.. ‘உங்களை, ஹை ஸ்கூல்ல கூடப் படிகிற ஒரு ஸ்டூடண்ட் ஒருதலையாக லவ் பன்றார். அவர் தான் ஜீவி. ஆனா, நீங்க பெரிய பாடகியாக வர்றத்துக்கு அவர் தான் மறைமுகமா ஹெல்ப் பண்றார். அவர் யாருன்னு தெரியாமலேயே நீங்க அவர் மேல கிரெஷ்ஷா இருக்கீங்க. அப்போ தான் ஜீவியோட ஃபிரெண்ட் அந்த கிரெஷ் நான் தான்னு க்ளைம் பண்ணி உங்களைக் கல்யாணம் வரைக்கும் கூட்டிக் கிட்டு வந்துடுறார். இதை ‘ஆல்டர்நேட் ரியாலிட்டி’ உலகத்துல ஜி.வியால் தடுக்க முடிஞ்சுதா, இல்லையாங்கிறது தான் கதை’ என்றார். எனக்கு புரிஞ்ச மாதிரியும் இருந்தது.. புரியாத மாதிரியும் இருந்தது. பைண்ட் பண்ணின திரைக்கதைப் புத்தகத்தை கொடுத்தாங்க. அதை வாங்கிப் படித்ததும் இன்னும் தலை சுத்தல் அதிகமாகிவிட்டது. அதில் அண்டர்லைன் பண்ணி படிச்சுட்டு, நடக்கிறது நடக்கட்டும்ன்னு ஷூட்டிங் கிளம்பிப் போனேன். அது இவ்வளவு சூப்பரான படமா வரும்..’செந்தாழினி’ங்கிற என்னோட கேரக்டர் இவ்வளவு டாக் ஆகும்ன்னு நான் நினைக்கவே இல்ல.

