Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நாடாளுமன்ற தேர்தல்.. சிதம்பரம் தொகுதிக்கு மீண்டும் அடி போடும் திருமா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 28, 2023
in அரசியல் செய்திகள்
0
நாடாளுமன்ற தேர்தல்.. சிதம்பரம் தொகுதிக்கு மீண்டும் அடி போடும் திருமா.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Cuddalore oi-Mani Singh S
Updated: Wednesday, June 28, 2023, 15:44 [IST]
கடலூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் போட்டியிடுவேன் என்று தொல் திருமாவளவன் கடலூரி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியுள்ளார். அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நாடளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லாத நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளையும் எந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்தும் இலைமறைக்காயாய் பேசத்தொடங்கிவிட்டன. அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிதம்பரம் மக்களவை தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் தற்போது சிதம்பரம் தொகுதி எம்.பியாகவே உள்ளார். பானை சின்னத்தில் போட்டியிட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி திருமாவளவன் போராடி வெற்றி பெற்றிருந்தார். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சந்திரசேகரனை விட 3,219 வாக்குகள் கூடுதலாக பெற்று திருமாவளவன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது 5,00,229 வாக்குகளை பெற்று இருந்தார். இந்த நிலையில், மீண்டும் சிதம்பரம் தொகுதியை திருமாவளவன் குறி வைத்து இருப்பது அவரது பேட்டி மூலம் ஊர்ஜிதமாகியுள்ளது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிதம்பரம் தொகுதியில் தான் மீண்டும் நான் போட்டியிட இருக்கிறேன். இதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது. நடராஜர் கோவிலில் நடக்கும் பிரச்சினைகளுக்கு அரசும் சட்டமும் சொல்வதற்கு தீட்சதர்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். கோவிலில் நடக்கும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும். திரையுலக நட்சத்திரங்களை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்யும் நிலை உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் சினிமா நடிகர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆந்திராவில் என்டிஆர் அரசியலுக்கு வந்தார். ஆனால் மற்ற மாநிலங்களில் எந்த சூப்பர்ஸ்டாரும் வரவில்லை. சினிமாவில் இருக்கும் செல்வாக்குடன் அரசியலுக்கு வந்துவிடலாம் என மற்ற மாநிலத்தில் யாரும் செயல்படவில்லை. பக்கா ஸ்கெட்ச்! ‛ஒகே’ சொல்லும் பிரதமர் மோடி! நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டி? புதிய தகவல் இந்த விமர்சனங்களைத்தான் நான் முன்வைத்தேனே தவிர நடிகர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை நான் முன் வைக்கவில்லை. இது பொதுவான விமர்சனம். பொது வாழ்வுக்கு எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம். திரைத்துறையில் நடிப்பவர்களை முதல்வராக தேடும் நிலை தமிழகத்தில் மட்டுமே உள்ளது. விஜய் அரசியலுக்கு வருவதை நான் எதிர்க்கவில்லை. வரவேற்கிறேன்” என்றார். திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் தான் போட்டியிட இருப்பதாக தனது விருப்பத்தை வெளிப்படுத்தினாலும் திமுக கூட்டணியில் அவருக்கு அங்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது தேர்தல் நெருங்கும் போது கூட்டணியில் ஏற்படும் மாற்றங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையிலேயே திருமாவளவனின் விருப்பம் நிறைவேறுமா? இல்லையா? என்பது தெரியும்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Thol Thirumavalavan has said that he will contest from the Chidambaram Lok Sabha constituency in the coming parliamentary elections as well while meeting the media in Cuddalore.

.

Previous Post

இரண்டு பெண்களை இந்தியாவுக்கு உடனடியாக அழைத்து வாருங்கள்.!

Next Post

“2017-ல் சித்தராமையா பயந்து பின்வாங்கினார்; நானாக இருந்திருந்தால்..” – டி.கே.சிவக்குமார் சொல்வதென்ன?| Karnataka deputy CM DK Shivakumar make a political spark about CM Siddaramaiah

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"2017-ல் சித்தராமையா பயந்து பின்வாங்கினார்; நானாக இருந்திருந்தால்.." - டி.கே.சிவக்குமார் சொல்வதென்ன?| Karnataka deputy CM DK Shivakumar make a political spark about CM Siddaramaiah

"2017-ல் சித்தராமையா பயந்து பின்வாங்கினார்; நானாக இருந்திருந்தால்.." - டி.கே.சிவக்குமார் சொல்வதென்ன?| Karnataka deputy CM DK Shivakumar make a political spark about CM Siddaramaiah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In