பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியில் உள்ள ஆசிரியர்கள் மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் ஆகியவற்றில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் இடைநிலை, பட்ட தாரி, முதுநிலை ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12,000, ரூ.15,000, ரூ.18,000 என வழங்கப்பட்டது.

