Wednesday, September 16, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சரத் பவார் vs அஜித் பவார்: யாரிடம் ‘பவர்’? உண்மையான பலம் இன்று தெரியும்.. ஒரே நாளில் கட்சி கூட்டம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 5, 2023
in அரசியல் செய்திகள்
0
சரத் பவார் vs அஜித் பவார்: யாரிடம் ‘பவர்’? உண்மையான பலம் இன்று தெரியும்.. ஒரே நாளில் கட்சி கூட்டம்!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

India oi-Vignesh Selvaraj
Updated: Wednesday, July 5, 2023, 12:06 [IST]
மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாகப் பிளவு பட்டு, அஜித் பவார் பாஜக – ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று சரத் பவார், அஜித் பவார் இருவருமே கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவசேனா- பாஜக கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 53 பேரில் 40-க்கும் மேற்பட்டவர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அஜித் பவார் தெரிவித்தார். அஜித் பவாரின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக கூறிய சரத்பவார் கட்சி கொள்கைகளை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தாரா சுற்றுப்பயணத்தில் இருந்து மும்பை திரும்பிய தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சட்டவல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அஜித் பவார் தலைமையிலான அணிக்கு 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுக்கு மேல் இல்லை என்றும் எனவே அஜித் பவாருடன் சென்ற எம்.எல்.ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் விதிகளை பயன்படுத்தவும் சரத் பவார் தரப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அமைச்சர்களாக பதவி ஏற்ற அஜித் பவார் உள்ளிட்ட 9 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தேசியவாத காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து சபாநாயகருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஆலோசனைக் கூட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் ஒய்.பி சவான் அரங்கில் நடைபெற உள்ளது. அதேசமயம், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.பி. எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், மாநில – மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் பந்த்ராவில் பகல் 1 மணிக்கு நடைபெறுகிறது. இன்று சரத் பவார், அஜித் பவார் என இரு தரப்பும் ஒரே நாளில், அதுவும் 2 மணி நேர இடைவெளியில் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதன் மூலம் சரத் பவார் மற்றும் அஜித் பவார் இருவருக்கும் உண்மையிலேயே இருக்கும் ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறித்த தெளிவான விவரம் இன்று தெரியவரும் என்பதால் மகாராஷ்டிர அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
While the Sharad Pawar group has called a meet of MLAs and party functionaries at 11 am at YB Chavan Centre at Nariman Point, deputy CM Ajit Pawar has summoned all the legislators at 1 pm to the Mumbai Education Trust in Bandra.

.

Previous Post

அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் நியமனம் 

Next Post

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

காசோலை மோசடி வழக்கில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளருக்கு 6 மாதம் சிறை தண்டனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In