கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் குமரகுரு தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். முன்னாள் அமைச்சரும் கள்ளக்குறிச்சி தேர்தல் பொறுப்பாளருமான பா.மோகன் உடன் திறந்த வெளி வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சங்கராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கராபுரம் பேரூராட்சி, பாண்டலம், புதுப்பட்டு, மையனூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருசக்கர வாகனங்கள் புடை சூழ திறந்த வெளி வாகனத்தில் வேட்பாளர் குமரகுரு முன்னாள் அமைச்சர் மோகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
வாக்கு சேகரிப்பின் போது சங்கராபுரம் நகரப் பகுதியில் வழக்கறிஞர் விக்னேஷ் கோவிந்தன் தலைமையில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு கிரேன் மூலம் 61 அடி உயர மாலையை அதிமுக நிர்வாகிகள் அணிவித்தும் மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதில் தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் பா.மோகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.


கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை