மாதவரம்.மார்ச்.31 திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி அறிமுகக் கூட்டம் சென்னை அடுத்த லட்சுமிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் முன்னாள் அமைச்சருமான மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளருமான சிறுனியம் பி.பலராமன், ப.சீனிவாசன், ஜி.கே. இன்பராஜ், அலெக்ஸ், தேமுதிக மாவட்டச் செயலாளர் கே.எம். டில்லி, திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் செந்தில்குமார், பகுதி செயலாளர்கள் வேலாயுதம், எம்.கண்ணதாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.மனோகரன், வடகரை மு.சுந்தர், ஒன்றியச் செயலாளர்கள் சோழவரம் பி.கார்மேகம், புழல் ஆர்.சுப்பிரமணி, வில்லிவாக்கம் ஜி.வி. செந்தில்குமார், வழக்கறிஞர் எம்.தமிழரசன், செங்குன்றம் பேரூர்செயலாளர் டி.ரமேஷ், தேமுதிக நிர்வாகிகள் பாபுராவ், சிங்காரம், வி.எல். பாபு, ஒன்றிய நிர்வாகிகள் சரவணன், ஸ்மைல் ரஞ்சித், மோரை பாலு, அலமாதி சீனிவாசன், ரஜினி, புழல் நாகராஜ், லட்சுமணன், மணிகண்டன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் இஸ்மாயில்,கவுன்சிலர்கள் ஜெய்சங்கர், இ.சேட்டு, மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளான தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகி கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கமெண்ட்ஸ் செய்ய விரும்பவில்லை