தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி வாய்ப்பை இழந்து நிற்கும் போதும், இன்றும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நல்ல விஷயம் என்றால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை குறிப்பிடுவார்கள் பலரும். கட்சி வித்தியாசமின்றி பாராட்டு பெற்ற இந்த சட்டத்தின் மூலம் பல உண்மைகள் வெளிவந்துள்ளன, முறைகேடுகள் அம்பலம் படுத்தப்பட்டுள்ளன. ஆர்.டி.ஐ.ஆர்வலர்கள் பலர் தங்கள் உயிரையும் துச்சமென மதித்து இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி தீர்வு காண்பதில் முனைப்பு காட்டி வ்ருகின்றனர்.
அதேநேரம் இச்சட்டத்தின் கீழ் கேட்கும் தகவல்களைத் தர மறுப்பதும் அங்கங்கே நடப்பதுண்டு.

ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் இச்சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்திருக்கும் பதில் ஒன்று தகவல் கேட்டவரை மட்டுமின்றி நம் எல்லாரையுமே திடுக்கிட வைப்பதாக இருக்கிறது.
“ஆம், உயிர், உடமைக்குப் பாதுகாப்பில்லாத காரணத்தால் விவரம் வழங்க இயலாது’ என பொட்டிலடித்தால் போன்ற ஒரு பதில் தரப்பட்டுள்ளது. பதிலைத தந்திருப்பது இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் அலுவலகம்.
