Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர் ராவிற்கு வைத்த செம்ம செக்..! – ஆட்டமே இப்பதான் சூடு பிடிக்குது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரேவந்த் ரெட்டி, சந்திரசேகர் ராவிற்கு வைத்த செம்ம செக்..! – ஆட்டமே இப்பதான் சூடு பிடிக்குது.
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்பு அரசுப் பணத்தில் 22 சொகுசு கார்களை சந்திரசேகர் ராவ் வாங்கி அரசுப் பணத்தை வீணடித்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

சந்திரசேகர் ராவ்

சந்திரசேகர் ராவ்

தெலங்கானாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்  10 ஆண்டுகளாக முதல்வராக இருந்த கே.சந்திரசேகர் ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைத் தோற்கடித்து, காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார்.

இந்நிலையில், ஹைதராபாதில் ரேவந்த் ரெட்டி நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அவர், “கடந்த 10 ஆண்டுகால ஆட்சி நடத்தியவர்களின் தவறான செயல்பாடுகளால் தெலங்கானா இப்போது பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. மாநிலத்தின் நிதிநிலை மோசமான நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. 

முதல்வராகப் பதவியேற்றவுடன், எனக்காக அரசு செலவில் வாகனம் எதையும் வாங்க வேண்டாம் என்றும், ஏற்கெனவே முதல்வருக்காக ஒதுக்கப்பட்டுள்ள வாகனத்தையே புதுப்பித்து பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினேன்.

ரேவந்த் ரெட்டி

ரேவந்த் ரெட்டி

ஆனால், இதற்கு அதிகாரிகள் அளித்த பதில் எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. முந்தைய முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக தேர்தல் அறிவிப்புக்கு 10 நாள்களுக்கு முன்பு 22 டொயோட்டோ லேண்ட் குருஸ்யர் காா்களை அரசுப் பணத்தில் வாங்கியுள்ளார்.  அந்தக் கார்கள் இப்போது விஜயவாடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் குண்டு துளைக்காத வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காரும் ரூ.3 கோடி மதிப்புள்ளவை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீண்டும் முதல்வராகி விடுவோம் என்ற மிகுதியான நம்பிக்கையுடன் சந்திரசேகரராவ்  இதைச் செய்துள்ளார். இதன்மூலம் மாநிலத்தில் நிதி ஆதாரத்தை முந்தைய முதல்வர் எவ்வாறு பயன்படுத்தியுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும். முந்தைய ஆட்சியாளர்கள் ரூ.1 லட்சம் கோடி வரை அரசுப் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்” என்று பேசியுள்ளார்.

Previous Post

அமெரிக்காவில் கோர விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலி

Next Post

விஜயகாந்த்தால் MLA ஆன முன்னாள் தலைவர்கள் அவரின் இறுதி சடங்கிற்கு வருவார்களா?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
விஜயகாந்த்தால் MLA ஆன முன்னாள் தலைவர்கள் அவரின் இறுதி சடங்கிற்கு வருவார்களா?

விஜயகாந்த்தால் MLA ஆன முன்னாள் தலைவர்கள் அவரின் இறுதி சடங்கிற்கு வருவார்களா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In