ராஜபாளையத்தில் காவல் துறை சார்பில் நடைபெற்ற தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா குறித்த விழிப்புணர்வு பேரணி வடக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் தலைமையில். நாடார் உறவின்முறை தலைவர் வடமலையான்.பள்ளிச் செயலாளர் அழகர் ராஜன். பள்ளிச் செயலாளர் கண்ணன் மற்றும்பள்ளி மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் வடக்கு காவல் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் பள்ளி மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சாலை விதிகளை மதிக்க வேண்டும், தலைக்கவசம் அணிய வேண்டும், அதிவேக பயணம் கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும், செல்போன் பேசியபடி வாகனம் இயக்க கூடாது, மது போதையில் வாகனம் ஓட்ட கூடாது, பேருந்து படியில் பயணம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், விழிப்புணர்வு வாசகங்களை முழக்கமிட்டபடி பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி,
ரயில்வே பீடர் சாலை, காந்தி சிலை உள்ளிட்ட நகரின் மையப் பகுதிகள் வழியாக வந்து மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நிறைவடைந்தது.


