News oi-Jeyalakshmi C
Published: Saturday, July 1, 2023, 15:42 [IST]
சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. அடைமழை காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது. இந்த பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். ராகு கேது பெயர்ச்சி: ஒருவருக்கு நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணமாக ராகுவும் கேதுவும் இருக்கின்றன. தசாபுத்தி சரியில்லாமல் இருந்து ராகு கேதுவும் ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவர் தற்கொலை முடிவு எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுவார்கள். ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமே அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். மேஷம்: அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு விரைய ஸ்தானத்திற்கும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திற்கும் மாறுகின்றனர். ஜென்ம ராசியில் அமர்ந்து ஆட்டிப்படைத்து வரும் ராகு ஐப்பசி மாதத்திற்குப் பிறகு விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம், புது வீடு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். ஆறாம் வீட்டிற்கு இடம் மாறும் கேது பகவானால் சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலைஅமையும். தொழில் வியாபாராத்தில் போட்டி ஒழியும். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார்கள். ராகு போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஒயமாட்டிர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். பூர்வீக சொத்துக்களால் லாபம் அதிகரிக்கும். கடன் சுமை குறையும். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். பலவித ஏமாற்றங்களால் ஊரை விட்டு ஓடி விடுவோமா என்று நினைத்தவர்கள் சொந்த ஊரிலே தலை நிமிர்ந்து வாழலாம். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். மிதுனம்: லாப ஸ்தானத்தில் இருந்த ராகு தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். கடகம்: ராகு பகவான் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். சிம்மம்: ராகு பெயர்ச்சி யோகத்தையும் பெருமை புகழையும் தரப்போகிறது. திடீர் ஜாக்பாட் கிடைக்கும். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்கு சாதகமாகும்.சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்றலாம்.சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும். 2 ல் கேது வருவதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். கன்னி: ஜென்ம கேது களத்திர ராகு மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. ராசியில் கேது பயணம் செய்யப்போவதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Rahu kethu peyarchi palan 2023 Tamil: This year October 30th 2023 month Rahu ketu transit, Rahu transit to Meenam Ketu transit to Kanni check out Mesham, Rishapam, Mithunam, Kadagam, Simmam and Kannai Rahu ketu peyarchi palangal.
Story first published: Saturday, July 1, 2023, 15:42 [IST]

