Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நியோ-மேக்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி: 3 இயக்குநர்கள் உட்பட 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 1, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
நியோ-மேக்ஸ் நிறுவனம் ரூ.5,000 கோடி மோசடி: 3 இயக்குநர்கள் உட்பட 10 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
2
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை: விருதுநகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனம் நியோ – மேக்ஸ். இந்த நிறுவனம் கூடுதல் வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த ஜெயசங்கரேஸ்வரன் மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

இப்புகாரின் பேரில் நிறுவன இயக்குநர்கள் மதுரை அரசரடியைசேர்ந்த எஸ்.கமலக்கண்ணன் (55), பொன்மேனியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (54), திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த டி.வீரசக்தி (49) மற்றும் முகவர்கள் விருதுநகர் சூலக்கரை வி.தியாகராஜன் (51), நெல்லை பாளையம்கோட்டை பி.பழனிசாமி (50), கோவில்பட்டி கே.நாராயணசாமி (63),

அருப்புக்கோட்டை எஸ்.மணிவண்ணன் (55), சிவகங்கை குமாரப்பட்டி அசோக் மேத்தா பஞ்சய் (43), தேவகோட்டை ராம் நகர் எம்.சார்லஸ் (50), தூத்துக்குடி லெட்சுமிபுரம் செல்லம்மாள் (80) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 10 பேரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இவர்களுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து சிவகங்கையைச் சேர்ந்த கண்ணன் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடுகையில், ‘மனுதாரர்கள் 68 போலி நிறுவனங்கள் நடத்தி பணம் வசூலித்துள்ளனர்.

பத்தாயிரம் புகார்தாரர்கள் உள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. இந்நிலையில், மனுதாரர்கள் சூம் மீட்டிங் நடத்தி யாரும் புகார் அளிக்கக்கூடாது, புகார் அளித்தால் முதலீடு செய்த பணம் திரும்பக் கிடைக்காது என மிரட்டியுள்ளனர்.

மனுதாரர்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். யார் யார் பெயரில் சொத்துகள் உள்ளன? எங்கெங்கு சொத்துகள் உள்ளன? பினாமிகள் யார்? என்பதைக் கண்டறிய வேண்டி உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகிவிடுவர் என்றார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, 10 பேரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

.

Tags: இயககநரகளஉடபடகடதளளபடநயமகஸநறவனமபரனமசடமனமனஜமனர.5000
Previous Post

Agri College : தரவரிசை பட்டியலில் திருத்தம் தெரிவிக்க நாளை கடைசி – வேளாண். பல்கலை.; கால்நடை மருத்துவ படிப்புகள் விவரம்-agri college tomorrow is the last day to revise the rank list agriculture univ veterinary courses details

Next Post

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ஐப்பசியில் அடைமழை.. யாருடைய வீட்டில் ராகுவால் பண மழை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ஐப்பசியில் அடைமழை.. யாருடைய வீட்டில் ராகுவால் பண மழை

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ஐப்பசியில் அடைமழை.. யாருடைய வீட்டில் ராகுவால் பண மழை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In