Jobs oi-Halley Karthik
Updated: Tuesday, June 13, 2023, 8:12 [IST]
டெல்லி: 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் ‘ரோஸ்கர் மேளா’ திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று 70 ஆயிரம் இளைஞர்களுக்கு காணொலி வாயிலாக பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்களில் வரும் 2025ம் ஆண்டுக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில், இதனை ஓர் இயக்கம் போல கொண்டு செல்ல வெண்டும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து இது ‘ரோஸ்கர் மேளா’ திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி அவ்வப்போது இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். தற்போது இதன் தொடர்ச்சியாக இன்று சுமார் 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். காணொலி வாயிலாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பணி ஆணைகளை வழங்கிய பின்னர், ஆணையை பெற்ற இளைஞர்களிடம் கலந்துரையாடுகிறார். இந்த இளைஞர்கள் ஆன்லைன் மூலம் கர்மயோகி பிரம்ப் மூலம் பயிற்சிகளை பெறுவார்கள். இன்று காலை 10.30 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாடு முழுவதுமிருந்து நிதிச் சேவைத் துறை, அஞ்சல், பள்ளிக் கல்வி, உயர்கல்வி, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், அணுசக்தி, ரயில்வே அமைச்சகம், தணிக்கை மற்றும் கணக்குத் துறை, அணுசக்தித் துறை மற்றும் உள்துறை அமைச்சகம் போன்ற துறைகளுக்கு பணியாற்ற இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கடந்த 16ம் தேதி இதே போல சுமார் 71 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி ஆணைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
As part of ‘Roskar Mela’ program to create job opportunities for 10 lakh people, Prime Minister Narendra Modi will issue job orders to 70,000 youth through video today.

