சென்னை: புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் , பிரதமர் மோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விளக்கி கூறினார்.தொடர்ந்து, தமிழகத்திற்கு மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

