கடலூர் மாநகராட்சி 31-வது வார்டுக்கு உட்பட்ட சரவணா நகர் நத்த வழி இணைப்புச் சாலையின் பிரதான குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை கழிவுகள் நிரம்பி வழிகின்றன. அதை அகற்ற எந்த நடவடிக்கையும் உள்ளாட்சி அமைப்புகள் எடுப்பதில்லை என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். கழிவுநீர் நிரம்பி வழிவதால் கொசுத்தொல்லை அதிகரிப்பதுடன் மலேரியா டெங்கு போன்ற வியாதிகளாலும் மக்கள் அவதி படுகின்றனர்.
பொதுவாக அந்தக் கழிவுகளை லாரியில் மாற்று இடத்திற்கு அப்புற படுத்த வேண்டும். ஆனால் உள்ளாட்சி நிர்வாகம் அவ்வாறு செய்யாமல் சிறிய மோட்டார் வைத்து கழிவு நீரை இறைத்து மழைநீர் சேகரிப்பு பகுதியில் விடுகின்றனர். இதனால் கொசு தொல்லை மட்டும் அல்லாமல் குடிநீரும் மாசுபடுகிறது.
மேலும் இப்பகுதி மக்கள் சாலை விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு அப்பகுதி சாலைகளில் பேரிகாடு மற்றும் வேகத்தடை அமைக்கவும் பல மாதங்களாக கேட்டு வருகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனபோக்கினால் மக்களின் உயிர் ஆபத்தில் உள்ளது என்று அப்பகுதி மக்கள் விரக்தியில் பேசுவதையும் காண முடிகிறது.

பொதுவாக பேரிகாடு வைக்காததற்கு அதிகாரிகள் மக்களிடம் கூறும் காரணமாவது, அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளி பேரிகாடு கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும் பள்ளி நிர்வாகம் பேரிகாடு கொடுத்த உடனே சாலையில் பேரிகாடு வைப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நாள்தோறும் அப்பகுதி சாலையில் போக்குவரத்து நெரிசல், பாதாசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் அடிக்கடி விபத்துகள் சந்தித்து வருகின்றனர்.
மேற்கண்ட குறைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற மக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டு வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கு வழி பிறக்குமா? பொறுத்திருந்து பாப்போம்.

