பிரசிடென்சி சர்விஸ் கிளப் செயற்குழுக் கூட்டம் நேற்று 19/12/2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் திரு.அழகேசன் தலைமையிலும் செயலாளர் திரு.இராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் நடந்துமுடிந்த சங்கப் பொதுக்குழு பற்றிய கருத்துகளும், அடுத்தமாதம் நடைபெறயிருக்கும் பொங்கல் விழா பற்றிய ஆலோசனை மற்றும் சங்க காலெண்டரை சங்க உறுப்பினர்களுக்கும், கள்ளர் நாட்டு கோவில்களுக்கும் எவ்வாறு கொண்டுசேர்ப்பது என்பது பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் சங்க முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சங்கப் பொருளாளர் திரு.கபிலபரனன் நன்றி கூறினார்.



