லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சோனம் வாங்சுக்கை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….
நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனர் பிரகாஷ் ராஜ் லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அதை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் சேர்க்கக் கோரி லேவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக்கை இன்று சந்தித்தார். பாஜக தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதியான லடாக்கை 6 வது அட்டவணையில் இணைக்கும் வாக்குறுதியை நடைமுறைபடுத்தவேண்டும் என்று கூறினார். பாஜக பொய் சொல்லி நம்மிடம் வாக்கு சேகரித்ததா என்று கேள்வி கேட்டு அங்கிருந்து வீடியோ வெளியிட்டுள்ளார். அப்படி பாஜக நமக்கு நம்பிக்கை துரோகம் செய்தால் நாம் அனைவரம் ஒன்றுகூடி அதை பெற வேண்டும் என்று கூறினார்.


