மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்.சுதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மயிலடுதுறை வேட்பாளர் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனிடையே சத்தீஸ்கர், தமிழ்நாடு மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.
