தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை தலைமை இயக்குனர் திரு. மகேஸ்வர் தயால் ஐபிஎஸ் அவர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறை துறையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் தலா ரூபாய் 500 மதிப்பிலான பொங்கல் பரிசு கூப்பன் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பொங்கல் பரிசு கூப்பனை பயன்படுத்தி சிறை சந்தையில் முற்றிலும் சிறைவாசிகளால் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ரெடிமேட் ஆடைகள் சுங்கடி சேலை கைலி வகைகள் செக்கு எண்ணெய் வகைகள், மற்றும் இனிப்பு கார வகைகள் போன்றவற்றை வாங்க முடியும்
இன்று மதுரை மத்திய சிறையில் சிறைத்துறை சரக துணைத் தலைவர் திரு. பழனி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு .சதீஷ்குமார் ஆகியோர் சிறைப் பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு கூப்பன் வழங்கி *பொங்கல் சிறப்பு சிறை சந்தை விற்பனையை துவக்கி வைத்தனர்



பொங்கல் பரிசு கூப்பன் வழங்கியதை வரவேற்கிறேன் மேலும் சிறைத்துறை காவல் அலுவலர்கள் இரவு நேரங்களில் அவ்வப்போது ரோந்து சென்று சிறைவாசிகளின் நடத்தையை கண்காணிக்க வேண்டுகிறேன். இரவு நேரங்களில் சிறைவாசிகளின் உடல் நலத்தையும் கண்காணிக்க வேண்டும் அதாவது சிறைவாசிகளுக்கு உடல் நலம் இல்லாமல் போனால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டும் அதாவது சிறை மரணத்தை தடுக்க வேண்டுகிறேன்