கோவை வ.உ.சி.பூங்கா மைதானத்தில் நடைபெற்று வரும் கிரேட் பாப்பே சர்கஸ் நிர்வாகத்தின் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சர்கஸில் காட்சிப்படுத்த வைத்துள்ள கிளி மற்றும் நாய்களைத் துன்புறுத்தியதாக எழுந்த புகாரில், நிறுவன உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது ரேஸ்கோர்ஸ் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

