Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: செந்தில்பாலாஜி கைதுக்கு டி.ராஜா கண்டனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்: செந்தில்பாலாஜி கைதுக்கு டி.ராஜா கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடெல்லி: “தமிழகம் பெரியாருடைய மண் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்கமாட்டார்கள்” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா புதன்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அமலாக்கத் துறையின் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எந்தவிதமான மானுட நெறிகளுக்கும் ஒவ்வாத செயல்களை அமலாக்கத் துறை தமிழகத்தில் இன்று நடத்தியிருக்கிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வலுவான கருத்துகளை முன்வைத்திருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவரது கருத்துகளை வரவேற்கிறது. அவருக்கு துணையாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நிற்கிறது.

இந்தப் பிரச்சினையில், மத்திய அரசுக்கு எதிராக வலுவான இயக்கத்தை நடத்த வேண்டும் என்றும் விரும்புகிறது. இன்றைக்கு பாஜக, தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில், பாஜக அல்லாத மாற்று அரசியல் கட்சிகள் ஆட்சி செய்கிற மாநிலங்களில் அந்த அரசுகளை கவிழ்ப்பதற்கும், அந்த அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பதற்கும் பெரு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்திலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஸ்டாலின் தலைமையில் வெற்றிகரமாக நடந்துகொண்டிருக்கிற ஆட்சிக்கு நெருக்கடியைத் தர வேண்டும் என்றுதான் பாஜக இதனை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், இதை வைத்துக்கொண்டு தமிழகத்தில் அரசியல் லாப தேடலாம் என்று பாஜக கருதுகிறது. தமிழகம் அப்படிப்பட்ட ஒரு மாநிலம் அல்ல. அது பெரியாருடைய மண் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாஜகவின் மதவெறி அரசியலை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்கமாட்டார்கள்” என்று அவர் கூறினார்.

.

Tags: அரசயலஏறகமடடரகளகணடனமகதககட.ரஜசநதலபலஜதமழகபஜகவனமககளமதவற
Previous Post

நாளை ஆட்டம் காட்டப் போகும் பைபர்ஜாய் புயல்.. அலெர்ட்டாக மக்களை வெளியேற்றிய குஜராத்.. ரயில்கள் ரத்து!

Next Post

ப்ரீ லாஞ்ச் அலர்ட்! சென்னை ரேடியல் 200 அடி ரோட்டில் TVS Emerald Elements @ 67.99 லட்சம் முதல்! | buy your own house in smart homes at TVS Emerald Elements in Kovilambakkam

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ப்ரீ லாஞ்ச் அலர்ட்! சென்னை ரேடியல் 200 அடி ரோட்டில் TVS Emerald Elements @ 67.99 லட்சம் முதல்! | buy your own house in smart homes at TVS Emerald Elements in Kovilambakkam

ப்ரீ லாஞ்ச் அலர்ட்! சென்னை ரேடியல் 200 அடி ரோட்டில் TVS Emerald Elements @ 67.99 லட்சம் முதல்! | buy your own house in smart homes at TVS Emerald Elements in Kovilambakkam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In