Friday, October 30, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரூ11 லட்சம் கோடியை குறைத்து நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் – மத்திய அரசு எதை மறைக்கிறது? சந்தேகத்தில் மக்கள்.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ரூ11 லட்சம் கோடியை குறைத்து நாடாளுமன்றத்தில் பதிலளித்த அமைச்சர் –  மத்திய அரசு எதை மறைக்கிறது? சந்தேகத்தில் மக்கள்.
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

07-08-2023 அன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி , கார்பொரேட் நிறுவனங்களின் வராக்கடன் தள்ளுபடி குறித்து எழுப்பிய கேள்விக்குப் (கேள்வி எண் 2983) மத்திய நிதியமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் கொடுத்தது.

நிதித் துறை இணையமைச்சர் Dr.பகவத் காரத் கொடுத்த பதிலின் படி,

2014-15- Rs-58,786

2015-16 -Rs-70,413

2016-17-Rs-1,08,373

2017-18-Rs-1,61,328

2018-19-Rs-2,36,265

2019-20-Rs-2,34,170

2020-21- Rs-2,02,781

2021-22 -Rs-1,74,966

2022-23-Rs-2,09,144

மொத்தம் -Rs-14,56,226 கோடி

கடந்த ஒன்பது நிதி ஆண்டுகளில், Rs.14 லட்சத்து 56 ஆயிரத்து 226 கோடி ரூபாய் மதிப்பிலான வராக் கடன்களை வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன” என்று கூறியிருந்தார். இந்த மொத்தத் தொகையில் கார்ப்பரேட் தொழில்கள் மற்றும் சேவைகளுக்கான கடன் தள்ளுபடி மட்டும் 7 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்திருந்தார்.

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2023 ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலக்கட்ட வாராக்கடன் தள்ளுபடி குறித்து நிதியமைச்சகம் கூறிய கணக்கு இது.. இந்நிலையில் குஜராத் மாநிலத்தைச்சேர்ந்த சஞ்சய் ஈழவா எனும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் வாராக்கடன் தள்ளுபடி குறித்து ரிசர்வ் வங்கியிடம் எழுப்பிய கேள்விக்கு RBI பதில் கொடுத்துள்ளது.

அதன்படி, கடந்த 9 ஆண்டுகால பிஜேபி ஆட்சியில் Rs.24,95,080 கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில்,2023-24 நிதியாண்டிற்கான வாராக்கடன் சேர்க்கப்படவில்லை.

2004 ம் ஆண்டு முதல் 2014 ஆண்டு வரையிலான காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகையோடு ஒப்பிட்டால் 810% அதிகமாக வாரக்கடனை பிஜேபி அரசு தள்ளுபடி செய்துள்ளது.

சரி உண்மை தகவல்களையாவது நாடாளுமன்றத்தில் பிஜேபி அரசு கூறுகிறதா என்றால், அதுவும் இல்லை 07-08-23 ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதியமைச்சகம் கூறிய பதிலுக்கும், ரிசர்வ் வங்கி RTI கொடுத்துள்ள பதிலுக்கும் இடையிலான வித்யாசம் Rs.11,38,814 கோடி ரூபாய்.

இவ்வளவு பெரிய நாட்டின் நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் உண்மைக்கு மாறான தகவல்களை துணிச்சலாக வெளிப்படுத்துகிறது. 9 ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் வாரக்கடனை தள்ளுபடி செய்துள்ள மத்திய அரசு என்று பொதுமக்கள் புலம்புவதை காணமுடிகிறது. இதில் வசூல் செய்த தொகை வெறும் 10% மட்டுமே..

Previous Post

உங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி இஸ்ரேல் போரினை நிறுத்த வேண்டும் – பிரதமர் மோடியிடம் OPS கோரிக்கை..!

Next Post

மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

மதவாத கொள்கைகளைக் கண்டித்து பிரச்சார பயணம்: உள்ளூர் காவல் துறையை அணுக மா.கம்யூ.க்கு ஐகோர்ட் உத்தரவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In