எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்தக் கூட்டம் நாளை பாட்னாவில் நடக்கவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின், சரத் பவார், மெகபூபா முஃப்தி, ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட 20 எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் அபிஷேக் பானர்ஜியுடன் கலந்துகொள்ள பாட்னாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு சென்ற மம்தா, லாலு பிரசாத் யாதவைக்கும், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவையும் சந்தித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, “லாலு பிரசாத் யாதவ் பூரண நலமுடன் இருக்கிறார். அவரைப் பார்த்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடும்பமாகப் போராடி வெற்றி பெறுவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

