இந்து மகா சபையின் தேசிய தலைவர், சுவாமி சக்ரபாணி மகாராஜ் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், ‘’சந்திரயான்-3 வெற்றிகரமாக தரை இறங்கிய இடத்துக்கு சிவசக்தி என பெயர் சூட்டியதற்கு நன்றி. மற்ற நாட்டினர் நிலவை உரிமை கொண்டாடுவதற்கு முன்பு நிலவின் மீது இந்திய அரசு தனது உரிமையை நிலை நாட்ட வேண்டும். எந்த பயங்கரவாதிகளும் அங்கு சென்றடையா வண்ணம் இந்திய அரசு விரைவாக செயல்பட்டு அதற்கான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
சந்திரயான்-3 லேண்டர் தரை இறங்கிய சிவசக்தியை தலைநகரமாக கொண்டு இந்து நாட்டை நிலவில் இந்தியா உருவாக்க வேண்டும். நிலவை இந்து சனாதன ராஷ்டிரா என்று அறிவிக்க வேண்டும்” என கூறியது சர்ச்சையானது.

