Sunday, September 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களுக்கு எதிரான வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தனியார் வாகனங்களில் அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களுக்கு எதிரான வழக்கில் அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தனியார் வாகனங்களில் விதிகளை மீறி, அரசு சின்னங்கள், ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதற்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘G’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்க்ளை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “தனியார் வாகனங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்டுள்ள இந்த ஸ்டிக்கர்களை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டது.

அப்போது தலைமை நீதிபதி, விதிமீறல்களுக்கு எதிராக வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் கோர முடியும் என சுட்டிக்காட்டினார். அதற்கு, மனுவில் கோரிக்கையை திருத்தி தாக்கல் செய்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள விரிவான உத்தரவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

.

Tags: அரசஅறககஉததரவஎதரனசயயசனனஙகளதககலதனயரவகனஙகளலவழககலஸடககரகளகக
Previous Post

தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது டெங்கு பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Next Post

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொலை: பங்களாவுக்குள் பதுங்கியிருந்த கணவர் கைது @ நொய்டா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொலை: பங்களாவுக்குள் பதுங்கியிருந்த கணவர் கைது @ நொய்டா

உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கொலை: பங்களாவுக்குள் பதுங்கியிருந்த கணவர் கைது @ நொய்டா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In