Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கரை வேஷ்டி பிரச்சனை: காவிக்கு மாறிய OPS..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
கரை வேஷ்டி பிரச்சனை: காவிக்கு மாறிய OPS..!
40
SHARES
64
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: இன்று நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள வந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சி கரை வேட்டிக்கு பதில் காவி வேட்டி கட்டிக்கொண்டு சாமியார் தோற்றத்தில் சட்டசபைக்கு வந்திருந்தார்.

ஆனால் அவருடன் சட்டசபைக்கு வந்திருந்த அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களான உசிலம்பட்டி மகேந்திரன், ஒரத்தநாடு வைத்திலிங்கம், ஆலங்குளம் மனோஜ் பாண்டியன் ஆகியோர் எப்போதும் போல் அதிமுக கரை வேட்டியை அணிந்து வந்திருந்தனர்.

O Panneerselvam Weared saffron Dhoti and AttendTN Assembly Special Session Today

அதிமுகவின் சின்னம், கொடி, பெயர் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு சென்றிருக்கிறது. இந்நிலையில் ஆளுநரால் திருப்பி அனுப்பப்பெற்ற சட்டமுன்வடிவுகளை மீண்டும் சட்டப்பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் விதமாக சட்டசபை சிறப்புக் கூட்டத் தொடர் இன்று அவசரமாக கூட்டப்பட்டது.

அதில் பங்கேற்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வழக்கமாக கட்டும் அதிமுக கட்சி கரை வேட்டியை தவிர்த்துவிட்டு காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபை வந்திருந்தார். நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை மீறினால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகலாம் என்பதால் தான் ஓ.பி.எஸ். காவி வேட்டியை தேர்வு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக கரை வேட்டி கட்ட முடியாமல் செய்ததை பார்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பூரிப்புடன் இருந்ததை பார்க்க முடிந்தது.

ஓ.பன்னீர்செல்வம் காவி வேட்டி கட்டிக்கொண்டு சட்டசபைக்கு வருவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே பல முறை இதே போல் காவி வேட்டியுடன் அவர் சபை நிகழ்வுகளில் பங்கேற்ற வரலாறு உண்டு. ஓ.பன்னீர்செல்வம் ஆன்மிக காரணங்களுக்காக தான் அதிமுக கரை வேட்டியை தவிர்த்து காவி வேட்டிக் கட்டிக்கொண்டு வந்தார் என்றும் மற்றபடி வேறு எந்தக் காரணமும் இல்லை எனவும் அவரது தரப்பு சமாளித்து வருகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மூலம் தனக்கு கட்சிக்கொடி, சின்ன விவகாரத்தில் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை உடைப்பதற்கான முயற்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஆசியாவிற்கே பெருமை சேர்த்த தேதி இன்று..!

Next Post

போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; 22 காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; 22 காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.

போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; 22 காவலர்கள் மீது நடவடிக்கை பாய்ந்தது.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    இவர் காவி வேட்டி கட்டிக்கொண்டு வந்தாலும் இவரை எந்த கட்சியினருமே சேர்க்க மாட்டார்கள் ஏன்னா இவர் எந்த ஒரு இடத்திலும் முரண்டு பிடிக்கும் பழக்கம் உள்ளவர் விட்டுக் கொடுத்து செல்லும் மனப்பான்மை கிடையாது அடாவடி செய்து பதவியை பிடிப்பதில் வல்லவர் ஜாதி முத்திரை கொண்டவர் எனவே இவரை எந்த கட்சியிலும் சேர்க்க மாட்டார்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In