Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆபாச வீடியோ சர்ச்சை.. வீடியோ விஷயம் தெரிந்தும் சீட் கொடுத்து தற்போது கைவிட்ட பாஜக..? கூட்டணியில் இருந்தபோதும் அதிரடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 30, 2024
in Default
0
ஆபாச வீடியோ சர்ச்சை.. வீடியோ விஷயம் தெரிந்தும் சீட் கொடுத்து தற்போது கைவிட்ட பாஜக..? கூட்டணியில் இருந்தபோதும் அதிரடி!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் மதல் இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ள நிலையில் மூன்றாம் கட்ட தேர்தல் வரும் மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அமைச்சர் அமித் ஷா இடஒதுக்கீடு குறித்து பேசியதாக பரப்பப்படும் போலி வீடியோ தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். வரும் மே 7 ஆம் தேதி அசாம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் வரும் மூன்றாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு அசாம் மாநிலத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவு அடைந்துள்ள நிலையில் அவற்றில் 100 தொகுதிகளில் தங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்றார். மேலும் தென்னிந்திய மாநிலங்களிலும் பாஜகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பாஜக 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்பதை காங்கிரஸ் தவறாக சித்தரித்து வருவதாக குற்றம் சாட்டிய மத்திய அமைச்சர் அமித் ஷா, 400 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பாஜக அரசியல் அமைப்பை மாற்றும் என்றம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் என்று பொய்யான செய்தியை காங்கிரஸ் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் இவை இரண்டுமே ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும் மக்களிடையே பொய்யான தகவலை பரப்பி அவர்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி செய்கிறது என்றும் அமித் ஷா குற்றம்சாட்டினார். பாஜக எப்போதும் எஸ்சி எஸ்டி ஓபிசி இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவான கட்சி என்பதை தான் தெளிவுபடுத்துவதாகவும் அமித் ஷா தெரிவித்தார். இதனை பிரதமர் நரேந்திர மோடியும் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக கூறியுள்ளார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து பாஜகவின் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்து அமித் ஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, பெண்களுக்கு எதிரான குற்றங்களை பாஜக கடுமையாக எதிர்க்கும் என்றும் நாட்டின் பெண் சக்திக்கு ஆதரவு என்பதே பாஜகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஏன் இந்த விவகாரத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பிய அமித் ஷா, இது சட்ட ஒழுங்கு பிரச்சனை இதில் தாங்கள் நடவடிக்கை எடுக்க முடியாது, கர்நாடக அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டில், ஹோலனர்சிபுராவிலிருந்து பாஜக வேட்பாளர் தேவராஜே கவுடா உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் குறித்து கடிதம் எழுதியுள்ளார். ரேவண்ணாவும் அவரது தந்தையும் நல்ல மனிதர் இல்லை ஆகவே பாஜக ஜேடிஎஸ் உடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் முறைகேடு பற்றி மோடி அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ பிரஜ்வலுக்காக பிரதமர் பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் கர்நாடக பாஜக மூத்த தலைவர் தேவராஜ் கவுடா, டிசம்பர் 23, 2023 அன்று ஜேடிஎஸ் எம்பி பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் முறைகேடு பற்றி அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்..

Here is senior Karnataka BJP leader Devaraj Gowda's letter to BJP President on Dec 23, 2023.

BJP knew about this horrendous sex scandal involving 2800+ women, yet it allied with JDS 10 days later.

Why lie shamelessly Amit Shah? pic.twitter.com/yyY67hwGVt

— Ankit Mayank (@mr_mayank) April 30, 2024
Previous Post

பாலியல் விடியோக்களை வெளியிட்டது நான்தான்.. பாஜக MPயின் ஓட்டுநர் பரபரப்பு வாக்குமூலம்..!

Next Post

லண்டனில் அதிர்ச்சி :பார்பவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபர் :2 போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் படுகாயம்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
லண்டனில் அதிர்ச்சி :பார்பவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபர் :2 போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் படுகாயம்..!

லண்டனில் அதிர்ச்சி :பார்பவர்களை எல்லாம் கத்தியால் குத்திய நபர் :2 போலீஸ் அதிகாரிகள் உட்பட பலர் படுகாயம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In