முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் MP பாலியல் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த வீடியோக்களை வெளியிட்டது நான் தான் என்று அவருடைய டிரைவர் வாக்குமூலம் தந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேவ கௌடாவின் பேரன் பிரஜ்வல் ஹாசன் என்ற தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் நிலையில் திடீரென அவர் பல பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியது குறித்த வீடியோக்கள் வெளியாகிய பரபரப்பை ஏற்படுத்தியது
இது குறித்து கர்நாடக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் பிரஜ்வால் வெளிநாட்டிற்கு தப்பித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் கார் ஓட்டுனர், பாலியல் வீடியோக்களை வெளியிட்டது நான்தான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது
நான் தான் தேவகெளடா குடும்பத்திற்கு டிரைவராக வேலை பார்த்தேன் என்றும் என்னுடைய நிலத்தை அவர்கள் பிடுங்கிவிட்டார்கள் என்றும், என்னுடைய மனைவியை அடித்து துன்புறுத்தினார்கள் என்றும் அதற்காகத்தான் நான் இந்த பாலியல் வீடியோக்களை வெளியிட்டேன் என்றும் அவர் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நபர், அவரது பெயர் கார்த்திக், தான் பிரஜ்வல் ரேவண்ணா டிரைவர் என்றும், வீடியோக்களை கசியவிட்டவர் என்றும் கூறுகிறார். பெரும்பாலான வீடியோக்கள் ஒரே அறையில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த பெண்கள் சாட்சிகள் உறுதியாக நின்றால், பிரஜ்வல் ரேவண்ணா நீண்ட காலம் சிறையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
