இந்நிலையில் மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி கூறியுள்ளார்.
‘கும்பமேளாவின்போது பிரயாக்ராஜ் சுத்தமாகவும், தெய்வீகமாகவும், அமைதியானதாகவும் இருக்க வேண்டும், அதன் பாதுகாப்பு மற்றும் புனிதத்தைப் பாதுகாக்க இந்துக்கள் அல்லாதவர்களை விலக்கி வைக்க வேண்டும்.
டீக்கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் ஆகியவற்றை அமைக்க இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதி வழங்கக்கூடாது. அவர்களுக்கு கொடுத்தால் அவர்கள் அங்கே துப்புவார்கள், சிறுநீர் கழிப்பார்கள்’ என்று கூறியுள்ளார்.
அகில பாரதிய அகாரா பரிஷத்தின் இந்த முடிவுக்கு அகில இந்திய முஸ்லீம் ஜமாத் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
