Thursday, September 17, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தண்ணீர் இல்லம்மா அது.. அவசரத்தில் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்.. கவனக்குறைவால் பறிபோன உயிர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 16, 2023
in அரசியல் செய்திகள்
0
தண்ணீர் இல்லம்மா அது.. அவசரத்தில் ஸ்பிரிட்டை குடிக்க கொடுத்த தாய்.. கவனக்குறைவால் பறிபோன உயிர்!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Madurai oi-Velmurugan P
Updated: Friday, June 16, 2023, 21:23 [IST]
மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த சிறுமிக்கு, அவரது தாயார் அங்கு வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து குடிக்க கொடுத்தார். இதனால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் நடந்த அலட்சியமே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் என சிறுமியின் தாயார் கதறி அழுதபடி குற்றம்சாட்டி உள்ளார். அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார்-தீபா தம்பதிக்கு அகல்யா என்ற 8 வயது மகள் உள்ளார். அகல்யாவுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சிறுநீரக் செயல்பாடு குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குழந்தை அகல்யாவை அழைத்துக்கொண்டு சென்று புதுவை, சென்னை, தஞ்சை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கொடுத்து வந்துள்ளார்கள். ஆனால் குழந்தைக்கு தீவிரமான உயர்சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தது. இதையடுத்து மாதம் 30-ம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அகல்யாவை ஆனந்தகுமார்-தீபா தம்பதி அனுமதித்துள்ளனர். மருத்துவமனையில் இருமுறை சிறுமி அகல்யாவிற்கு டயாலிசிஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் மீண்டும் டயாலிசிஸ் செய்துள்ளார்கள். அதன் பின்னர் சிறுமி அகல்யாவிற்கு ரத்த அழுத்தம் உயர்ந்து வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பதற்றம் அடைந்த அகல்யாவின் தாய் தீபா, அப்போது அகல்யாவின் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து சிறுமியின் குடிக்க கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிறுமி குடிக்கவிலையாம். தண்ணீர் இல்லை என தெரிந்த சிறுமி அதனை உடனே துப்பி இருக்கிறாராம். இதை பார்த்த செவிலியர் அது ஸ்பிரிட் என்பதை கூறியுள்ளார். ஆனாலும் சிறுமிக்கு திடீர் உடல் நிலை மோசமடைந்துள்ளது. உடனடியாக அகல்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த மருத்துவமனை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி அகல்யா இன்று (வெள்ளிக்கிழமை) பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் கவனக்குறைவால் தான் இந்த மரணம் நிகழ்ந்ததாக சிறுமியின் தாய் தீபா குற்றம்சாட்டி உள்ளார். டயாலிசிஸ் அறையில் அலட்சியமாக ஸ்பிரிட் பாட்டிலை வைத்திருந்த காரணத்தால் தான் சிறுமிக்கு இந்த நிலை ஏற்பட்டதாகவும், சிறுமி ஸ்பிரிட்டை முழுமையாக குடிக்காத போதிலும் சிகிச்சை பலன் இன்றி இறந்துபோனதாகவும் தாய் தீபா வேதனையுடன் கூறினார். இதையடுத்து குழந்தையின் இறப்பு குறித்து தல்லாகுளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமி கவனக்குறைவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாய், தந்தையின் சடலத்துடன்.. 3 நாட்கள் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை! கடைசி நேரத்தில் ட்விஸ்ட்
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
The girl, who was undergoing dialysis treatment at the Madurai Government Rajaji Hospital, was given the spirit kept there by her mother, mistaking it for water. As a result, the girl died tragically. The girl’s mother is crying and blaming the negligence of the hospital for the child’s death.

.

Previous Post

போடி-சென்னை பயணிகள் ரயில் சேவை| 61 நாள்களுக்குப் பிறகு மீன்பிடித்த பாம்பன் மீனவர்கள்- News in photos

Next Post

1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? – தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

1,161 வனத் துறை காலிப் பணியிடங்களை நிரப்ப ரூ.10.81 கோடி தேவைப்படுவது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In