போடி-சென்னை வரையிலான பயணிகள் ரயில் சேவைத் திட்டத்தை இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

பாம்பன் மீனவரின் வலையில் சிக்கிய மீன்!

61 நாள்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து, மீன்களை அள்ளி வந்த பாம்பன் மீனவர்கள்.

பிரதோஷத்தை முன்னிட்டு அருள்மிகு சொக்கநாதர் ஆலயத்தில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இராஜவல்லிபுரம், செப்பரை அருள்மிகு அழகிய கூத்தர் திருக்கோயிலில் ஆனித் திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் பலவேறு அமைப்பினர் இணைந்து மனுகள் அளித்தனர்.

ஊட்டியில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைப் பொது கணக்கு குழுவின் தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் உழவர் சந்தை, தாலுகா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
வெண்டிபாளையம் ரயில்வே கேட் தண்டவாளப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பெருந்துறையில் கூட்டுறவுத்துறையின்கீழ் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை செய்யும் அங்காடியை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வுசெய்தார்.

அரசுப் பள்ளியில் 11-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்துகொண்டு மாணவர்களிடத்தில் உரையாற்றினார்.

பெண் எஸ்.பி-க்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

நிலப் பிரச்னை காரணமாக சட்டப்பேரவை வளாகத்தில் தீ குளிக்க முயன்ற வாலிபரை போலிஸார் கைதுசெய்தனர்.

தி.மு.க-வினரால் நகர்ப் பகுதியில் ஓட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள்.

நகர்ப் பகுதியில் சுற்றித்திரியும் தெரு நாய்களைப் பிடித்த மாநகராட்சிப் பணியாளர்கள்.

மாவட்ட நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து, ஊரக வளர்ச்சித்துறையினர் 3-வது நாளாக காத்திருப்புப் போராட்டம்.

