Thursday, October 29, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“எங்களுக்கு நாங்களே போட்டி; வேறு யாரும் போட்டியில்லை” – சீமான்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
October 20, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
“எங்களுக்கு நாங்களே போட்டி; வேறு யாரும் போட்டியில்லை” - சீமான்
51
SHARES
82
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தருமபுரி: “சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலமிட்ட பெருமை கொண்ட தமிழனத்தை 60 ஆண்டுகால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த விட்டுள்ளது” என தருமபுரியில் நாம் தமிழர் கட்சி சீமான் தெரிவித்தார்.

நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்க அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(அக்.20) தருமபுரி வந்தார். நிகழ்ச்சிகளுக்கு முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியது, “மக்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சியின்மீது பெரும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் உள்ளது. இந்த மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலை முன்னெடுத்து பேசுவது நாங்கள் தான். இளைய தலைமுறை பிள்ளைகளிடம் நாங்கள் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளோம்.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் தான் வருகிறது. ஆனால், மாறுதலும் ஆறுதலும் இல்லை, வளர்ச்சியும் இல்லை. தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் இலவசம் என்றார் குன்றக்குடி அடிகளார். இலவசங்கள், சலுகைகள் எதையும் தர வேண்டாம். எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்கிறோம் நாங்கள். கல்வியை தரமாக கொடுத்தால், பேருந்து பயணத்துக்கு பெற்றோரே பணம் செலுத்திக் கொள்வார்கள். நிரந்தர வருவாய் அளிக்கும் வளர்ச்சித் திட்டங்களை ஏற்படுத்துங்கள்.

மற்றவர்கள் கல் மாவு மூலம் கோலம் போட்டுக் கொண்டிருந்த காலத்தில், எறும்பு உள்ளிட்ட சிறு உயிரினங்களுக்கு இரையாகட்டும் என்று அரிசி மாவில் கோலம் போட்ட பெருமைமிக்க தமிழ் இன மக்களை, கடந்த 60 ஆண்டு கால ஆட்சி இலவச அரிசிக்கு கையேந்த வைத்துள்ளது. விளையாட்டில் மதம், கடவுள் சார்ந்த கோஷங்கள் மூலம் நம்மை கற்காலத்தை நோக்கி தள்ளிச் செல்கின்றனர். அடுத்த தலைமுறை பிள்ளைகள் சாதி, மதம், கவர்ச்சி ஆகியவை அண்ட முடியாத பெரும் நெருப்பாக வர வேண்டும்.

சாராயம் குடித்து இறந்தால் அதிக அளவில் இழப்பீடு. நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரன் இறந்தால் சொற்ப இழப்பீடு. மொத்தத்தில், இங்கிருப்பது மோசமான ஆட்சிமுறை. ஆளுநரை நீக்க வேண்டுமென பலர் வலியுறுத்துகின்றனர். ஆனால், நாங்கள் ஆளுநர் பதவியையே நீக்க வேண்டும் என்கிறோம். மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரங்கள் ஆளுநருக்கு எங்கிருந்து வருகிறது. அரசு கொண்டுவரும் திட்டங்களை ஆதரித்து சட்டமாக்குவது தான் ஆளுநரின் பணி.

திரைப்படங்களை எதிர்க்கும்போதுதான் பளீர் வெளிச்சம் விழுகிறது. விஜய் நடித்த படத்துக்கு கர்நாடகாவில் எழுந்துள்ள எதிர்ப்பைப் பார்த்தால் அம்மாநில முதல்வர் சித்தராமையாவா அல்லது வாட்டாள் நாகராஜா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் கேஜிஎப் படம் வெளியானபோது எங்களால் தடுத்திருக்க முடியாதா?. ஆன்மிக பேரறிஞரான பங்காரு அடிகளார் தமிழர்களின் மெய்யியல் மரபில் செய்தது அனைத்தும் புரட்சி. அவரது கல்விச் சேவைகளும் முக்கியமானவை.

நாட்டின் சுதந்திரத்துக்கும், வளர்ச்சிக்கும் பெரும்பாடுபட்ட நம் முன்னோர்களின் அடையாளங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன. இங்கிருப்பவை அனைத்தும் திராவிட அடையாளங்கள் மட்டும் தான். உண்மை வரலாறு எழுச்சியை ஏற்படுத்தும் என்பதற்காகவே இவ்வாறு மறைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வை கொண்டுவந்தது காங்கிரஸ், ஆதரித்தது திமுக. இவ்வாறு முந்தைய ஆட்சியில் பெற்றெடுத்த குழந்தைகளை, பெரும்பான்மையுடன் இன்று ஆட்சியில் உள்ளவர்கள் வளர்த்தெடுக்கின்றனர். அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிப்பதால் இந்தியாவும் இஸ்ரேலை ஆதரிக்கிறது. பாலஸ்தீனம் தன் நிலப்பரப்பில் பிச்சையாக போட்ட நிலம் தான் இஸ்ரேல். அதில் இருந்து கொண்டு அவர்களின் நாட்டையே ஆக்கிரமிக்க முயற்சிப்பதால் தான் சண்டை வருகிறது. நாம் தமிழர் கட்சிக்கு யாரும் போட்டியில்லை, எங்களுக்கு நாங்கள் தான் போட்டி.” இவ்வாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

.

Tags: எஙகளககசமனநஙகளபடடபடடயலலயரமவற
Previous Post

“விவசாயம் செய்ய முடியாவிட்டால் பிச்சைதான் எடுக்க வேண்டும்” – மதுரை ஆட்சியரிடம் ஆதங்கப்பட்ட விவசாயிகள்

Next Post

கரூர் | போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கரூர் | போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

கரூர் | போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    போட்டிக்கு போனால் தான் எதிராளிகள் இருப்பார்கள் போட்டிக்கு போகாமல் வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எங்களுக்கு எதிரிகளே இல்லை என்றால் எப்படி போட்டிக்கு போங்கள் அப்ப அங்கு கண்டிப்பாக எதிரிகள் இருப்பார்கள் முடிந்தால் மோதி வெற்றியை பெறுங்கள் ஆண்டவன் படைப்பிலேயே அனைவருக்கும் எதிரிகள் உண்டு அது சந்தர்ப்ப சூழ்நிலைகளில் தான் தெரியவரும் உதாரணத்திற்கு புழுவுக்கு மீன் எதிரி மீனுக்கு கொக்கு எதிரி கொக்குவிற்கு வேடன் எதிரி

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In