“தென் தமிழ்நாட்டைச் சேர்ந்த கல்வி, வணிகம், சுகாதாரம், விருந்தோம்பல், இளைஞர் ஸ்டார்ட் அப்கள் மற்றும் பெண் தொழில்முனைவோர், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெருவாரியான உள்ளூர் தலைவர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் மாணவர்களுடன் ஆளுநர் ஆர். என் ரவி கலந்துரையாடி இருக்கிறார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கையால் தமிழக இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை இழந்தவர்களாக உணர்கின்றனர்.

ஹிந்தியை எதிர்க்கிறோம் என எந்த தென்மாநில மொழிகளையும் கூட, படிக்க இளைஞர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது” என்று தேசிய கல்விக் கொள்கை 2020 -ஐ அமல்படுத்துவதற்கு பெரும் தேவை உள்ளது“ என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.
