முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் “இந்தியப் பொருளாதாரத்தின் குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சி” கருத்துக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளார்.
நிதியமைச்சர் சீதாராமன், சனிக்கிழமை அகமதாபாத்தில் குஜராத் சேம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் அண்ட் இன்டஸ்ட்ரி (ஜிசிசிஐ) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசுகையில், மோடி அரசாங்கத்தின் சாதனைகளைப் பற்றி பெருமையாகக் கூறினார், “இந்தியப் பொருளாதாரம், குறிப்பாக வங்கித் துறையில், 2014 முதல் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பயிற்றுவிக்கத்தக்க தகுதியான பாடம்.” என்று கூறினார்.
அவரது அறிக்கைக்கு கடுமையாக பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பொருளாதாரம் குறித்து தன்னுடன் விவாதிக்க அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகரை அனுப்புமாறு சமூக ஊடக பயனரைக் கேட்டு அவரை கேலி செய்தார்.
ஒரு பயனரின் ட்வீட்டிற்கு பதிலளித்த சுவாமி, “கியான் கங்கா அல்லது சிபல் மன்றத்தில் என்னுடன் விவாதம் செய்ய அவரது அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகரை அனுப்பச் சொல்லுங்கள். பொருளாதாரம் பற்றிய விவாதத்திற்கு அவர் வருவது கழுதையை பில்ஹார்மோனிக் இசைக்குழுவில் பாட அனுப்புவது போன்றது. .”
