Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

Paytmக்கு அடுத்த அடி: பொய் ஆவணங்கள், வாடிக்கையாளர்களின் அடையாளங்களை திருடுதல், நிதி முறைகேடு என நீளும் மோசடிகள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 1, 2024
in Default
0
Paytmக்கு அடுத்த அடி: பொய் ஆவணங்கள், வாடிக்கையாளர்களின் அடையாளங்களை திருடுதல், நிதி முறைகேடு என நீளும் மோசடிகள்..
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பண மோசடி செய்ததாக பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு இந்திய நிதி கண்காணிப்பு அமைப்பு (எப்ஐயு-ஐ) ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

பேடிஎம்

பேடிஎம்

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர்களின் அடையாள ஆவணங்களை தவறாக பயன்படுத்தி நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டில் சிக்கியது. இதையடுத்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, மார்ச் 15ம் தேதி முதல் தனது கணக்குகளில் புதிதாக வைப்புத் தொகை பெறுவதற்கும், பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தடைவிதித்தது.

இதனால் வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், வாலெட்டுகள், ஃபாஸ்டேக்குகள் போன்றவை தொடர்ந்து செயல்படும் வகையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி, தனது நோடல் கணக்கை ஆக்சிஸ் வங்கியுடன் இணைத்தது.

இந்திய நிதி கண்காணிப்பு அமைப்பு (எப்ஐயு-ஐ)

இந்திய நிதி கண்காணிப்பு அமைப்பு (எப்ஐயு-ஐ)

இந்நிலையில் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி ஈடுபட்டதாக மத்திய விசாரணை அமைப்புகளிலிருந்து எப்ஐயு-ஐ-க்கு தகவல் அனுப்பப்பட்டது.

அதன் அடிப்படையில் எப்ஐயு-ஐ, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்குகளை ஆய்வு செய்தது. பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மூலம் நிதி முறைகேடு நடந்துள்ளதாகவும், இது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளதாகவும் எப்ஐயு-ஐ தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எப்ஐயு-ஐ ரூ.5.49 கோடி அபராதம் விதித்துள்ளது.

அபராதம்

அபராதம்

இதுகுறித்து பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஒரு வணிகப் பிரிவில் உள்ள பிரச்சினை தொடர்பாக தற்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த பிரச்சினையைத் தொடர்ந்து, எங்கள் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் எப்ஐயு-ஐ-க்கு அறிக்கை சமர்ப்பிக்கும் வழிமுறைகளை மேம்படுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Previous Post

புதிய கடல் வாழ் உயிரினம் கண்டுபிடிப்பு : ‘திரௌபதி முர்மு’ என பெயர் சூட்டல்!

Next Post

புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் : கேரள வாலிபர்கள் இருவர் கைது புதிய போதை பொருட்களால் போலீசார் அதிர்ச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்  : கேரள வாலிபர்கள் இருவர் கைது  புதிய போதை பொருட்களால் போலீசார் அதிர்ச்சி

புதுச்சேரியில் 20 கிலோ கஞ்சா பறிமுதல் : கேரள வாலிபர்கள் இருவர் கைது புதிய போதை பொருட்களால் போலீசார் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In