Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஒடிசா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 21, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஒடிசா அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: ஒடிசா மாநிலம் அருகே வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும், தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (ஜூலை 21) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதேபோல, வரும் 22, 23 மற்றும் 26-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24, 25-ம் தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இடி, மின்னலுடன்…: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி, 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.

ஜூலை 20-ம் தேதி (நேற்று) காலை 8 மணியளவில் பதிவான மழை அளவுகளின்படி கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 7 செ.மீ., வால்பாறை, சின்கோனா, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., நீலகிரி மாவட்டம் கூடலூர் சந்தை, மேல்கூடலூர், சாம்ராஜ் எஸ்டேட், திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, ஊத்து ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்றுவீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Tags: அரகஒடசகறறழதததமழகததலதழவநடகளககபகதபதயபயயமழவயபப
Previous Post

மணிப்பூர் அரக்கர்கள்.. நிர்வாணமாக பெண்களை இழுத்துசென்ற கொடூரம்! 78 நாளுக்கு பின் 4 பேர் கைது

Next Post

பேரிடியாக வந்த கருத்துக்கணிப்பு.. பாஜக ஷாக்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேரிடியாக வந்த கருத்துக்கணிப்பு.. பாஜக ஷாக்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்

பேரிடியாக வந்த கருத்துக்கணிப்பு.. பாஜக ஷாக்! மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In