Saturday, October 31, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் – நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 27, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் - நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது
14
SHARES
22
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருநெல்வேலி: திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி புதுப்பேட்டையை சேர்ந்த மாநகராட்சி 20-வது வார்டு திமுக கவுன்சிலர் ஷேக்மன்சூர் (42) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பேட்டை நகர இந்து முன்னணி துணைத் தலைவர் ஐயப்பன் என்பவருக்கும், பேட்டை செக்கடி பகுதியிலுள்ள இடம் தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் திருநெல்வேலி டவுன் பகுதியிலுள்ள டீக்கடையில் அவர்கள் இருவருக்கும் இடையே நேற்றுமுன்தினம் இரவில் தகராறு ஏற்பட்டது.

அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில் அங்கிருந்த கம்பியால் ஷேக்மன்சூர் மற்றும் அவரது நண்பர் கனி ஆகிய இருவரும் ஐயப்பனை தாக்கியுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பேட்டை காவல் நிலைய உதவிஆய்வாளர் செல்லதுரை இந்த மோதலை தடுத்துள்ளார். அப்போது அவரும் தாக்கப்பட்டார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த உதவி ஆய்வாளரும், ஐயப்பனும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் ஐயப்பன் தன்னை தாக்கியதாக ஷேக் மன்சூரும் அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

4 பிரிவுகளில் வழக்கு: இது தொடர்பாக ஐயப்பன் கொடுத்த புகாரின்பேரில் ஷேக்மன்சூர், கனி ஆகியோர் மீது திருநெல்வேலி டவுன் போலீஸார் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பாக 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மாநகராட்சி கவுன்சிலர் ஷேக்மன்சூர், கனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்து முன்னணி பிரமுகரையும், மோதலை தடுக்க சீருடையில் வந்திருந்த காவல் உதவி ஆய்வாளரையும், ஆளுங்கட்சி கவுன்சிலர் ஒருவர் தாக்கி காயப்படுத்தியுள்ள சம்பவம் திருநெல்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Tags: இநதஎஸஐகதகவனசலரதககதலதமகநலலபரமகரமதமநகரடசமனனண
Previous Post

அமைதி, பாதுகாப்புக்கான உலக தலைவர் விருது – மாதா அமிர்தானந்தமயி தேவிக்கு பாராட்டு விழா

Next Post

பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து

பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In