நெல்லை மாநகராட்சி 7வது வார்டு திமுக கவுன்சிலர் இந்திராமணி ராஜினாமா செய்துள்ளார். பல முறை மனு அளித்தும் வார்டில் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
கடந்த பல மாதங்களாக பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயரிடம் முறையிட்டோம். எந்த பணிகளும் எங்களது பகுதிகளில் நடைபெறவில்லை. இதனால் மக்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்டமாக ராஜினாமா செய்யப்போகிறேன் என்று முன்பே தெரிவித்தார். ஆளுங்கட்சி கவுன்சிலரே மேயரை கண்டித்து 2022இல் போராட்டம் நடத்திய சம்பவம் நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது. இன்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.

