ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தை முன்னிட்டு குஜராத்தின் ஜாம்நகர் சுற்றுவட்டார மக்கள் 51,000 பேருக்கு நேற்றிரவு விருந்தளிக்கப்பட்டது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்சண்ட்டின் மகள் ராதிகா மெர்சண்டுக்கும் கடந்த ஆண்டு ராஜஸ்தானில் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

குஜராத்தின் ஜாம்நகரில் மார்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை திருமணத்துக்கு முந்தைய விழாவுக்கு ஏற்பாடு நடைபெறுகிறது. ஜூலை 12ஆம் தேதி திருமணம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணத்தை ஒட்டி ஜாம்நகர் ரிலையன்ஸ் டவுன்ஷிப் அருகே உள்ள ஜாக்வாட் என்ற கிராமத்தில் சுமார் 51,000 பேருக்கு, நேற்று பாரம்பரிய குஜராத்தி உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இன்னும் சில தினங்களுக்கு தினமும் இச்சேவை தொடருமென கூறப்பட்டுள்ளது.

