‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டியை தலைப்புச் செய்தியாக அச்சிட்ட காரணத்தால் நமது அம்மா நாளிதழின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக கூட்டணியை விட்டு வெளியேற விரும்பாத முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


