பிளேயிங் லெவனில் முகமது ஷமி இடம்பெறுவாரா?
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரின்போது, முகமது ஷமிக்கு காயம் ஏற்பட்டது. அதன் பின், அவர் இந்திய அணிக்காக விளையாடவில்லை. 14 மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்து தொடரின் மூலம் முகமது ஷமி இந்திய அணிக்குத் திரும்பினார். இருப்பினும், முதல் இரண்டு போட்டிகளில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை.
