Last Updated:
இதனை ஆய்வு செய்த சபாநாயகர் சதீஷ் மஹானா, பேரவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எம்எல்ஏ தம்மை சந்திக்க வேண்டும் என்றார்.
உத்தரபிரதேச சட்டப்பேரவை நுழைவு பகுதியில் பான்மசாலா சாப்பிட்டுவிட்டு எம்எல்ஏ ஒருவர் எச்சில் உமிழ்ந்த பகுதியை சபாநாயகர் பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் பங்கேற்ற எம்எல்ஏ ஒருவர், பேரவை வளாகத்தில் நுழையும் இடத்தில் பான் மசாலாவை துப்பியிருந்தார். இதனை ஆய்வு செய்த சபாநாயகர் சதீஷ் மஹானா, பேரவையில் அநாகரிகமாக நடந்து கொண்ட எம்எல்ஏ தம்மை சந்திக்க வேண்டும் என்றார்.
#WATCH | Uttar Pradesh Assembly Speaker Satish Mahana raised the issue of some MLA spitting in the House after consuming pan masala. He said that he got the stains cleaned, urged other MLA to stop others from indulging in such acts and also appealed to the MLA to step forward and… pic.twitter.com/VLp32qXlU8
— ANI (@ANI) March 4, 2025
இந்நிலையில் பேரவை நடவடிக்கை தொடங்கியதும், சம்பந்தப்பட்ட உறுப்பினர் தம்மை வந்து சந்திக்காவிட்டால் பொதுவெளியில் பெயரை குறிப்பிட நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேரவை வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் சபாநாயகர் சதீஷ் மஹானா கூறியுள்ளார். உத்தரபிரதேச சட்டப்பேரவை நுழைவு பகுதியில் பான்மசாலா சாப்பிட்டுவிட்டு எம்எல்ஏ ஒருவர் எச்சில் உமிழ்ந்த பகுதியை சபாநாயகர் பார்வையிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
March 04, 2025 2:38 PM IST

