Monday, September 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ஆட்சியரால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி; மீண்டும் பணியமர்த்திய கனிமவளத் துறை ஆணையர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 28, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
ஆட்சியரால் பணியிலிருந்து விடுவிக்கப்பட்ட அதிகாரி; மீண்டும் பணியமர்த்திய கனிமவளத் துறை ஆணையர்! | mineral resources dept commissioner revokes action taken against tirupur mineral resources ad
1
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

“திருப்பூர் மாவட்டக் கனிமவளத்துறை உதவி இயக்குநராகப் பணியாற்றிய வள்ளல், தனது அலுவலகத்தில் கோமதி என்ற பெண்ணைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார். இது அரசு விதிகளுக்குப் புறம்பானது. மேலும், 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், அமைச்சர், ஆட்சியரின் ஆய்வுக்கூட்டங்கள் எதிலும் கலந்துகொண்டதில்லை.

வள்ளலின் செயல்பாட்டால், மக்கள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற அவருக்கு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும், வள்ளல் விளக்கமளிக்கவில்லை. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணி விதி 17(a)-ன் கீழ், வள்ளலை மே 17 முதல் உதவி இயக்குநர் பணியிலிருந்து விடுவித்து உத்தரவிடுகிறேன்” என திருப்பூர் ஆட்சியராக இருந்த வினீத் அண்மையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

ஆட்சியர் வினீத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட கடைசி நாளில், கனிமவளத்துறை உதவி இயக்குநர் வள்ளல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தினர், இயற்கை ஆர்வலர்கள் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிலையில் வள்ளலை, திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநராக மீண்டும் நியமித்து, கனிம வளத்துறை ஆணையர் ஜெயகாந்தன் உத்தரவிட்டிருக்கிறார். அவர் பிறப்பித்த உத்தரவில், “தமிழ்நாடு புவியியல் மற்றும் கனிம வளத்துறை சிறப்பு விதிகள்படி, உதவி இயக்குநர் பதவியில் ஆட்களை நியமிப்பது, பணியிட மாற்றம் செய்வது, அவர்களுக்கு விடுமுறை அளிப்பது ஆகியவை கனிம வளத்துறை ஆணையரின் கட்டுப்பாட்டின்கீழ் வருகின்றன.

கனிம வளத்துறை ஆணையர் உத்தரவின்பேரில்தான் அந்தத் துறையைச் சார்ந்த உதவி இயக்குநரை பணியிலிருந்து மாவட்ட ஆட்சியர் விடுவிக்க முடியும். அதன்படி, திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநர் வள்ளலை பணியிட மாற்றம் செய்து எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், ஆட்சியராக இருந்த வினீத் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பின்னர்தான், வள்ளலைப் பணியிலிருந்து விடுவிப்பதற்கான உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார். எனவே, வள்ளலை பணியிலிருந்து விடுவிப்பதற்காக வினீத் பிறப்பித்த உத்தரவு ரத்துசெய்யப்பட்டு, அவர் மீண்டும் திருப்பூர் மாவட்டக் கனிம வளத்துறை உதவி இயக்குநராக நியமிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

.

Tags: actioncommissionerdeptmineralresourcesrevokestirupurஅதகரஆடசயரலஆணயரகனமவளததறபணயமரததயபணயலரநதமணடமவடவககபபடட
Previous Post

புளூடூத் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதியவர் கைது

Next Post

ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-01 செயற்கைக்கோள்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-01 செயற்கைக்கோள்

ஜிஎஸ்எல்வி-எஃப்12 ராக்கெட் மூலம் நாளை விண்ணில் பாய்கிறது என்விஎஸ்-01 செயற்கைக்கோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In