சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய வழிகாட்டுதல் குழுவில் செயல்படும் ஒரு “கை” பற்றிய கதை இது.
அந்த கை அப்போது அன்பழகனையும், மோகனையும் பாரதிதமிழன் முன்னிலையில் இணைத்து வைத்த போது முன்னின்ற கை. அப்போது கரம் உயர்த்தி கை தட்டி குதூகலித்த கை. அதே பாரதிதமிழன் தேர்தலே நடத்தாமல் முறைகேடாக சங்கத்தை நடத்துவதற்கு எதிராக பத்திரிகையாளர்கள் திரண்ட போது நேரடியாக களத்தில் இறங்காமல் ஒதுங்கி நின்றது அந்த கை.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ரங்கராஜ் பாண்டே தலைமையில் வினாயகர் சதுர்த்தி பூஜை நடத்தியபோது முன்னின்றது அந்த கை.
2021 ஆம் ஆண்டு சென்னை பிரஸ் கிளப் என்ற பெயரை விமலேஷ்வரன் என்பவர் முறையாக பதிவு செய்யப்பட்ட நேரத்தில் அவருக்கு எதிராக பாரதிதமிழன் நடத்திய கூட்டத்தில் கலந்துக் கொண்டது அந்த கை.
சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்த உடனே காவல்துறையை கண்டித்து பாரதிதமிழன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இவர் வருகைக்காக பாரதிதமிழன் காத்திருந்து பின்னர் எல்லோருமாக முஷ்டி உயர்த்திய போது உடன் இருந்தது அந்த கை.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு எதிரான வழக்குகளை வாபஸ் பெற செய்து “சுமுகமாக” சங்கத்தின் தேர்தல் நடத்தும் பொறுப்பை அதே பாரதிதமிழனிடம் வழக்கு வாபஸ் பெற்ற மனுவை வழங்கியதும் அந்த கை.
கடந்த ஆண்டு கவிக்கோ மன்றத்தில் பாரதிதமிழனுக்கு எதிராக நடைபெற்ற போது சத்தமில்லாமல் போனது அந்த கை.
பிறகு வழக்குகளை காரணம் காட்டி காலம் கடத்திய நிலையில் வழக்குகளை வாபஸ் பெற்ற பிறகும் தேர்தலை நடத்தாத பாரதிதமிழனுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில் பொய் கணக்கை காட்ட பாரதி தமிழன் நடத்திய போலி பொதுக்குழுவில் பங்கேற்று 23 வருட கணக்கை ஒருமணி நேரத்திலேயே பார்த்து அதற்கு ஒப்புதல் வழங்கி முதல் கையெழுத்திட்டது அந்த கை.
அதே பாரதி தமிழனுக்கு எதிராக மீண்டும் பத்திரிகையாளர்கள் திரண்ட போது அந்த கூட்டத்திலும் பங்கேற்றது அந்த கை.
உண்மையான சென்னை பிரஸ் கிளப் நிர்வாகிகள் மே மாதம் 25 ஆம் தேதி நடத்திய கருப்பு மை பூசி அழிக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எவ்வித அசைவும் இல்லாமல் இருந்தது அந்த கை.
நிறைவாக, பாரதி தமிழன் நடத்திய நாடகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ராஜினாமா கடிதத்தை வாங்கியதும் அந்த கை.
அதற்கு அடுத்த நாளே சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை சீரமைக்க 23 ஆண்டுகள் கழித்து ஞானம் ஏற்பட்டு வழிகாட்டல் குழு என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி அந்த
வழிகாட்டுதல் குழுவிலும் பங்கேற்றிருக்கிறது அந்த கை.
அவ்வளவு ஏன்? 25 ஆண்டுக்கு முன்பு சங்கப் பதிவு ரத்து செய்யப்பட்டு காலாவதியான ( MUJ ) எம்.யு.ஜே. யூனியனுக்கு, பதிவே காலாவதி ஆகிப்போன விவரமே தெரியாமல், ஸ்டிரிக்ட் ஆபிசராக இருந்து அந்த தேர்தலை நடத்திக்காட்டியது அந்த கை.
தற்போது வரையில் MUJ என்ற அந்த அமைப்பை மீட்க முடியாமல் மீண்டும் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை குறிப்பிட்ட சிலரிடம் அடகுவைக்க வேண்டி செயல்படுவது அந்த கை.
தமிழக அரசு சார்பில் தினசரி/ வார/ மாத இதழ்களுக்கும் Accreditation Card அதுவரை வழங்கி வந்த நிலையில், வார / மாத பத்திரிகைகளுக்கு Accreditation Card வழங்க தேவையில்லை; Press Pass மட்டும் வழங்கினால் போதுமென்று வலியுறுத்தி, தான் அக்ரிடேஷன் கமிட்டி மெம்பராக இருந்த போது நடைமுறையை மாற்றியதும் அந்த கை தான்.
கடந்த வாரம் வரையில் பலமுறை நான் உட்பட எங்கள் நிர்வாகிகள் அவ்வளவு எடுத்துச் சொல்லியும் இளம் பத்திரிகையாளர்கள் பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிட MUJ வை போன்று சென்னை பத்திரிகையாளர் மன்ற சீரமைப்பு என்ற பெயரில் மீண்டும் மீண்டும் எங்களுக்கு சொந்தமான பெயரை பயன்படுத்தியும் எங்கள் அமைப்பின் பெயரில் பணத்தை பெற்றுக் கொண்டு ரசீது வழங்கி வருகின்றது அந்த கை.
இத்தகைய கடந்த கால அனுபவங்கள் எல்லாமே, ஏதோ ஒரு வகையில் இப்போதும் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் யாரோ ஒருவருக்காக களமிறக்கபட்டு இருக்கிறதோ அந்த கை என்ற சந்தேகம் அனைவருக்கும் எழாமல் இல்லை.
கேஜிஎப் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விரியும் அந்த வசனங்களை போல, நீளும் அந்த கை வேறு யாருடையதும் அல்ல ; மூத்த பத்திரிகையாளர் மரியாதைக்குரிய அண்ணன் சாவித்திரி கண்ணன் கை தான் அந்த கை..!
ஒரே மனிதனாக ஒரு சங்கத்தை துவக்கி தொடர்ந்து நான்கு ஆண்டுகள் முறையாக நடத்தி ஐந்நூறு பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்த்து அதற்காக பல வழக்குகளில் சிறைக்கு சென்று நான்கு ஆண்டுகளாக வருமானத்தை இழந்து குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்பட்டுக் கொண்டு நீதிமன்றத்திற்கும் வழக்கறிஞருக்கும் செலவு செய்துக் கொண்டு சங்கத்தை யாரிடமும் பணம் வாங்காமல் நடத்தி பாருங்க அண்ணா அப்போ தெரியும் வலி என்னான்னு…
எங்களை அமைப்பின் பெயரை பயன்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள்.




❤️❤️❤️❤️❤️❤️❤️